தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் சிலர் தங்கள் வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையில் ெசல்வோர், வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகாஷ், ராஜபாளையம்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் மேலப்பாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்து தென்றல்நகர் வடக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இருந்து வந்த பொது கழிப்பறை கட்டிடம் கால்நடை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக மாற்று கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. பொது கழிப்பறை வசதி இல்லாததால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கழிப்பறை வசதி ஏற்படுத்திட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆமத்தூர்.
நாய்கள் ெதால்லை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் இடையே நாய்கள் குறுக்கிடுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
வினோத், நரிக்குடி.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவே உள்ளது. இதனால் இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், அருப்புக்கோட்டை.