'தினத்தந்தி' செய்தி எதிரொலி:விளாரிபட்டியில் மின்மாற்றி சீரமைக்கப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக விளாரிபட்டியில் மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே உள்ள விளாரிபட்டியில் மின்மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை மர்ம ஆசாமிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருடி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மின்வினியோகம் தடைபட்டது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருக தொடங்கின. இதுகுறித்து நேற்று முன்தினம் 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்மாற்றியை சீரமைத்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயிகளின் நிலை அறிந்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story