பாதுகாப்பற்ற நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்


பாதுகாப்பற்ற நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
x

அந்தநல்லூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருச்சி

அந்தநல்லூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியம் குழுமணி சிவன் கோவில் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் திறக்கப்பட்ட ஒருவாரகாலத்திற்கு நெல்கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் இங்கு வந்த விவசாயிகள் நெல்லை வினியோகிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனால் அறுவடை செய்த நெல்லை ஒரு சில விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் விற்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருந்து நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பாக...

ஆனால் விவசாயிகள் கொன்டு வரும் நெல்லையோ, கொள்முதல் செய்த நெல்லையோ பாதுகாப்பாக வைக்க எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழை பெய்தால் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேர பாதுகாவலா் நியமிக்காததால் பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுகிறது என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதுமட்டுமின்றி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களும் வெயிலில் நின்றுதான் பணியாற்றுகிறர்கள். எனவே விவசாயிகள் கொன்டு வரும் நெல்லையும் கொள்முதல் செய்யப்படும் நெல்லையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு இரவு காவலா் ஒருவரை நியமித்து பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேன்டும். என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story