இருப்பிடத்திலேயே நேரடியாக நெல் கொள்முதல்


இருப்பிடத்திலேயே நேரடியாக நெல் கொள்முதல்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இருப்பிடத்திலேயே நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இருப்பிடத்திலேயே நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விற்பனை கூடம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதேபோல 'பார்ம் டிரேடிங்' எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்றும் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

நேரடியாக கொள்முதல்

அந்த வகையில் செம்பனார்கோவில் அருகே மாத்தூர் பகுதி விவசாயிகளிடம் அவர்களுடைய இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் 600 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் கோ-50 ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.1,900-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,800-க்கும், சராசரியாக ரூ.1,860-க்கும் விலை போனது.

இதேபோல் விவசாயிகளின் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் தவிர்க்கப்படுகிறது எனவும், மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைக்கிறது எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story