தோட்டக்கலை இயக்குனர் ஆய்வு
மேலகுப்பம் ஊராட்சியில் தோட்டக்கலை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், மேலகுப்பம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தோட்டக்கலை துறையின்மமூலம் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தபணிகளை தோட்டக்கலை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், வேளாண்மை துறை துணை இயக்குனர் செல்வராஜ், பொறியியல்துறை செயற்பொறியாளர் ரூபன்குமார், ரவிக்குமார் ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) வேலு, வேளாண்மை உதவி இயக்குனர் விக்னேஷ், துணை அலுவலர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story