திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு இயக்குனர் பாராட்டு


திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு இயக்குனர் பாராட்டு
x

திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு இயக்குனர் பாராட்டுதெரிவித்தார்.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையேயான 28 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவனத்தினர், விமானங்களை கையாளும் பிரிவினர், சுங்கத்துறையினர், வான்நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பேசும்போது, திருச்சி விமான நிலையம் ஆசிய பசிபிக் நாடுகளில் 2 மில்லியன்பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு அனைத்து துறையினரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். கூட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால், துணைபொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஜலால் மற்றும் விமான நிறுவன மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story