உண்டு உறைவிடப்பள்ளிகளில் பழங்குடியினர் நல இயக்குனர் ஆய்வு


உண்டு உறைவிடப்பள்ளிகளில் பழங்குடியினர் நல இயக்குனர் ஆய்வு
x

ஜவ்வாதுமலையில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

ஆய்வு

திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனர் எஸ்.அண்ணாதுரை ஜவ்வாதுமலையில் உள்ள பட்டறைக்காடு, தொம்பரெட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

அப்போது இரவில் தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் தங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அரசு வெளிபழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் அதன் அருகாமையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை அவர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும் அவர் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் வந்தன் விகாஸ் கேந்திரா மூலம் செயல்படுத்தப்படும் முன்னேற்றம் குறித்தான செயல்பாட்டினை பழங்குடியினர் உழவர் சொசைட்டியில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. அதை அவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

உணவின் தரம்

பின்னர் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் கல்வி திறன் மேம்பாடு குறித்து பேசினார். பின்னர் பள்ளியினை ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரத்தினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வீரப்பனூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் காடுகளில் விளையும் பொருட்கள் எவ்வாறு விற்கப்படுகிறது என்பது குறித்தும் மலைவாழ்மக்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் திட்ட அலுவலர் ப.அன்பழகன், இளநிலை பொறியாளர் ஆர்.ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு சென்ற இயக்குனரிடம் தமிழ்நாடு பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகளான மாநில பொதுச் செயலாளர் நடுப்பட்டு கே.ரவி, மாநில இளைஞரணி தலைவர் சிவக்குமார் மாநில மகளிரணி தலைவி ஏ.இந்திராணி ஆகியோர் பழங்குடியினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு, பழங்குடியினர் நலத்துறை தனியாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் அரசு மூலம் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர்.


Next Story