மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி
முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செவித்திறன் பரிசோதகர் துரைப்பாண்டி அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் சந்திரகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் தங்கள் துறைசார்ந்து வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தவும், தொழில் வாய்ப்புகளையும் உண்டாக்கி தரவும் கோரிக்கை வைத்தனர். முகாமில் 3 பேருக்கு காதொலி கருவிகளும், செல்போன், மடக்கு ஊன்றுகோல் தலா ஒரு நபருக்கு வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story