நீதிபதியிடம் வாக்குவாதம் செய்த மாற்றுத்திறனாளி கைது


நீதிபதியிடம் வாக்குவாதம் செய்த மாற்றுத்திறனாளி கைது
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோர்ட்டில் நீதிபதியிடம் வாக்குவாதம் செய்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோர்ட்டில் நீதிபதியிடம் வாக்குவாதம் செய்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் அருகே உள்ள தாழக்குடி வீரநாராயணமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வரும் குடும்பநல கோர்ட்டுக்கு வந்தார். அங்கு மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் இருக்கிறதா? என்று பார்வையிட்ட வள்ளிநாயகம் திடீரென குடும்ப நல கோர்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். மேலும் கோர்ட்டில் அமர்ந்திருந்த நீதிபதியிடம் வாக்குவாதம் செய்ததோடு கோர்ட்டு பணிக்கு இடையூறு ஏற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி தபால் மூலமாக கொடுத்த புகாரை தலைமை எழுத்தர் பெஞ்சமின் ஜோஸ் கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளிநாயகத்தை கைது செய்தனர்.


Next Story