நெய்வேலியில்மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை


நெய்வேலியில்மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலைபோலீசார் விசாரணை
x

நெய்வேலியில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்


நெய்வேலி, பிப்.5-

நெய்வேலி வட்டம் 30 இளம்வழுதி தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 52). மாற்றுத்திறனாளி. இவருடைய வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நெய்வேலி வட்டம் 13 என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் சங்கருக்கும், தெர்மல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே வீட்டை சோதனையிட்டதில், கிருஷ்ணமூர்த்தி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பலரிடமும் பணம் வாங்கி என்.எல்.சி. தொழிலாளி ஒருவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் யாருக்கும் வேலையும் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story