மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் தலைமை தாங்குகிறார். இதில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம். மேலும் இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ 1, செல்ேபான் எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story