மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகர் உலகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் முருகேஸ்வரி (வயது 31). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், வைரவன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு முருகேஸ்வரி, கணேசன் என்ற கூலி தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் முருகேஸ்வரி வீட்டில் திடீரென்று கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முருகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story