பேரிடர் மேலாண்மை பயிற்சி
திருச்செங்காட்டங்குடியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மண்டல அளவிலான பேரிடர் காலங்களில் முதலுதவி செய்யக்கூடிய முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.திருமருகல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பேரிடர் மேலாண்மை பயிற்றுனர் சிற்றரசு கலந்து கொண்டு தீ, வெள்ளப்பெருக்கு, விபத்து குறித்த பயிற்சி அளித்தார். பயிற்சியில் ஊராட்சி செயலாளர்கள் இளங்கோவன், மகேஸ்வரி, துணைத் தலைவர் சதீஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story