பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்


பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
x

தென்னடார் ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் தென்னடார் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கண்ணகி வரவேற்றார். இதில் பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை அலுவலர் பூபதி கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். முகாமில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அருள்தாஸ் நன்றி கூறினார்


Next Story