பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
பஞ்சநதிக்குளத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. பயிற்சியினை முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகுரு பாண்டியன் தொடங்கி வைத்தார்.பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவிசெந்தில், சத்யகலா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட முதன்மை பயிற்றுனர்கள் அண்ணபூரணி, மணிமேகலை கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் தென்னடார், பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுச்சேத்தியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story