மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை
கூடலூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
கூடலூர்,
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை தனி தாசில்தார்கள் சாந்தி, வசந்த், தேசிய பேரிடர் மீட்பு குழு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிதேவ் பந்த், கஜேந்திர சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரக்கோணத்தில் இருந்து வந்த 18 பேர் கொண்ட குழுவினர் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடைமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.