போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி


போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
x

மாமண்டூர் ஏரியில் போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

தூசி

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே அரசு பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் ஏரியில் போலீசாருக்கு பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கமாண்டோ பயிற்சி பள்ளி பயிற்சியாளர் கதிரவன் தலைமையில் 65 கமாண்டோ போலீசாருக்கு மாமண்டூர் ஏரியில் பேரிடர் கால மீட்பு பணி குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அப்போது மீட்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story