தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி


தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி
x

தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி அருகே தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையின்போது மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்தும், தீயணைப்புத்துறையினர் மூலம் விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீ விபத்து ஏற்படும் போது எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அணைப்பது, சிலிண்டரால் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது உள்ளிட்டவை குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ராம், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story