விஜயநகர கால நடுகற்கள் கண்டெடுப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி நடத்த இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்துர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தற்போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ெரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இப்பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது. சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட உள்ள இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் அலுவலக தொலைபேசி 04179--222033 மற்றும் செல்போன் 7904513450 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.