உழவர் நண்பர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்


உழவர் நண்பர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்
x

செஞ்சியில் உழவர் நண்பர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் உழவர் நண்பர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை அலுவலர் தீபிகா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு உழவர் நண்பர்கள் குழு செயல்பாடுகள் குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அட்மா திட்ட தலைவர் வாசு, ஊராட்சி தலைவர் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story