வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்
வாணியம்பாடி உட்கோட்ட பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
வாணியம்பாடி,
வாணியம்பாடி உட்கோட்ட பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
வடமாநில தொழிலாளர்கள்
வாணியம்பாடி உட்கோட்ட பகுதியில் உள்ள வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், அம்பலூர், திம்மாம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இப்பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள் உணவகங்கள், கட்டுமான பணிகள், ஹாலோ பிரிக்ஸ் தொழிற்சாலை போன்றவற்றில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணிபுரிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
கலந்துரையாடல்
அதைத்தொடர்ந்து, வாணியம்பாடி - நியூடவுனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது பாதுகாப்பு குறித்து கேட்டு அறிந்தார்.
மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும், அவர்களது உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேச வைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்.
கூட்டத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நிலவழகன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அருண்குமார், சாந்தி, பழனி மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.