நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு


நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
x

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு இறந்த நிலையில் நெல்லை மாநகராட்சி முழுவதும் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படியும,் துணை ஆணையர் தானுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படியும் மக்கள் கூடும் இடங்கள் ரெயில் நிலையம், பஸ்நிறுத்தம், தியேட்டர்கள் ஆகிய இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிருமிநாசினி அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள புதிய பஸ்நிலையம், பஸ் நிறுத்தம், ஏ.டி.எம். மையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

இதேபோல் மேலப்பாளையம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுகாதார அலுவலர் அரசகுமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ்களை மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா வழங்கினார்.


Related Tags :
Next Story