1 000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


1 000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் கரியாலூர் போலீசார் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் நேற்று மதியம் கல்வராயன்மலை தும்பராம்பட்டு கருப்பன்குட்டை ஓடை பகுதியில் கரியாலூர் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக குப்புசாமி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். கல்வராயன்மலையில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 25 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story