போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்
போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் (வயது 33). இவர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஆசிரியர் செல்வகுமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story