2006-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டவாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு
2006-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய கிடங்கு மற்றும் விருத்தாசலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் நகர்புற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2006-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்தில் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தலின்பேரில் நேற்று தேர்தல் தாசில்தார் பாலமுருகன், நகராட்சி அலுவலர்கள் பூபதி, கருணாநிதி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் விருத்தாசலம் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு கதவு திறக்கப்பட்டது. பின்னர் கடந்த தேர்தல்களின்போது மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு அங்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில், 2006-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட 1431 வாக்குப்பதிவு எந்திரங்கள், 814 கட்டுப்பாட்டு கருவிகளை கண்டறிந்து, அதனை வாகனங்களில் ஏற்றி பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.