1 டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றம்
1 டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றம்
மயிலாடுதுறை
திருவெண்காடு
கடற்கரை தூய்மை தினம் வருகிற 17-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை பூம்புகார் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு பூம்புகார் மீன் ஆராய்ச்சி நிலைய தலைவர் வேல்விழி தலைமை தாங்கினார். பூம்புகார் கடற்கரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருமலை முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். தூய்மை பணியை ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். தூய்மை பணியில் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story