தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண் காயம்
தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் காயம் அடைந்தார்.
திருநெல்வேலி
இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரம் காலனி தெருவைச் சேர்ந்த சுரேஷ் மனைவி சுகன்யா (வயது 25). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சேகர் மனைவி இசக்கியம்மாள் (வயது 60). நேற்று சுகன்யாவுக்கும், இசக்கியம்மாளுக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இசக்கியம்மாள் குடத்தை வைத்து சுகன்யா தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசுலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story