தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு;மெக்கானிக் வெட்டிக்கொலை


விருதுநகர் அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மெக்கானிக்

விருதுநகர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி குலாளர்தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் மகேந்திரன் (வயது 45). ெமக்கானிக்

இவர் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் சூலக்கரையில் இருசக்கர வாகன ஓர்க் ஷாப் நடத்தி வந்தார். அந்தோணியின் சகோதரர்களான ஜெயராஜ், சின்னராஜ் ஆகியோரும் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேருக்கும் சொந்தமான தோட்டங்களுக்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சினர். 2 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொருவரும் தண்ணீர் பாய்ச்சியதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் சின்னராஜிக்கும், அந்தோணிக்கும் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு அந்தோணியும், அவருடைய மகன் மகேந்திரனும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சின்னராஜ், அவரது மகன் மாரியப்பன் (34) ஆகிய 2 பேரும் மகேந்திரனுடன் தகராறு செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

நேற்று காலை மகேந்திரனும், அவரது தந்தையும் தோட்டத்தில் இருந்தனர். மகேந்திரன் கிணற்றில் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாரியப்பன் மகேந்திரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மகன் அலறல் கேட்டு அந்தோணி பதறியபடி ஓடி வந்தார். மகேந்திரனை கிணற்று அருகே படுக்க வைத்தார். இதுகுறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், சற்று நேரத்திலேயே மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுதொடர்பாக மகேந்திரனின் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story