குடிநீர் பிடிப்பதில் தகராறு; பெண் வெட்டி கொலை


குடிநீர் பிடிப்பதில் தகராறு; பெண் வெட்டி கொலை
x

கரூரில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை வெட்டி கொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

பெண் ெவட்டி கொலை

கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி பத்மா (வயது 45). இவருக்கும், அதே பகுதியில் உள்ள சிலருக்கும் பொது குழாயில் குடிநீர் பிடிப்பதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு பத்மா பொது குழாயில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீண்டும் பத்மாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் குடிநீர் பிடிப்பில் தகராறில் ஏற்பட்டது.

இதனால் அடைந்த அதேபகுதியை சேர்ந்த மர்மநபர் ஒருவர் பத்மாவை அரிவாளால் வெட்டினார். பின்னர் அதனை தடுக்க வந்த இளங்கோவுக்கும் அரிவாள் வெட்டி விழுந்தது. இதில் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பத்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இளங்கோ பலத்த காயம் அடைந்தார்.

கணவர் படுகாயம்

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வெட்டு காயம் அடைந்த இளங்கோவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story