ஓசூர், சூளகிரியில்45 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


ஓசூர், சூளகிரியில்45 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x

ஓசூர், சூளகிரியில் 45 விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர், சூளகிரியில் 45 விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சிலைகள் வைத்து வழிபட்டனர். இந்த சிலைகள் வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்து சென்று ஏரி, குளம், உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஓசூரில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கடந்த 4 நாட்களாக நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. 5-வது நாளான நேற்று 20 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஓசூர் ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரி ஆகிய ஏரிகளில் கரைக்கப்பட்டன.

சூளகிரி

இதே போல் சூளகிரியில் 25-க்கும் மேற்பட்ட சிலைகளை பொதுமக்கள் வாகனங்களில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் அந்த சிலைகள் துரை ஏரியில் கரைக்கப்பட்டன. ஓசூர் மற்றும் சூளகிரியில், விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட உள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.


Next Story