மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்விசேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்குனர் (பொறுப்பு) முத்துப்பாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் 2023-ம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பட்டயம், சான்றிதழ் மற்றும் முதுநிலை பட்டய படிப்புகள், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எனவே, சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்வித்தகுதி மற்றும் சேர்க்கை விவரங்களை பல்கலைக்கழகத்தின் www.mkudde.orgஎன்ற இணையதளத்திலும், சேர்க்கை அனுமதிக்கு https://mkuniversityadmission.samarath.edu.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பயன்பெறலாம். இந்த மாணவர் சேர்க்கையானது வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் 7540080932 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.