விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
மின்னணு ஏல விற்பனை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் மறையூர், அசிக்காடு, கோவங்குடி, முருகன்தோட்டம், செங்குடி, வழுவூர், அகரகீரங்குடி பகுதிகளில் விவசாயிகளுக்கு மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை (இ-நாம்) திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ், மயிலாடுதுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நலத்திட்டங்களையும், மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை (இ-நாம்) திட்டம் ஏல முறை விற்பனை பற்றியும் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது விவசாயிகள் தங்கள் கருத்துக்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். முடிவில், மேற்பார்வையாளர் பாபு நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story