விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்


விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்
x

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

சுவாமிமலை அருகே உள்ள கோவிலாசேரி கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் 300 விவசாய பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது. இதில் வட்டார துணை வேளாண்மை அலுவலர் சாரதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், விஜயா, ரேவதி, ஊராட்சி செயலாளர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலாச்சேரி உதவி வேளாண்மை அலுவலர் மணவாளன் செய்து இருந்தார்.


Next Story