பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியானது. இதில் வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 15,341 பேரில் 13,299 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 86.69 ஆகும். இந்த நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வினியோகிகப்பட்டது. வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் தலைமை ஆசிரியர் நெப்போலியன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதேபோல காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சரளா மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உடன் இருந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story