பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்


பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்
x

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிளிக்குடி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரம்பூர் வட்டார சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சுயமரியாதை கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு புளு வைரஸ், டெங்கு காய்ச்சல் வராமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கிளிக்குடி தாய்த்தமிழ் பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், மன அழுத்தம் போக்கும் விதமாக யோகா பயிற்சி நடந்தது. பின்னர் மாணவர்களுக்கு கண் பரிசோதகர் பரணி கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்தார். இதில் மருந்தாளுனர் வினிதா, ஆசிரியர் சிங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story