பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வினியோகம்


பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வினியோகம்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வினியோகம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி துப்பரவு தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இணிபுகள் வழங்கப்பட்டன. இந்த பேரூராட்சியில் 28 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 86 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் வழங்கினர்.


Next Story