விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்


விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்
x
தினத்தந்தி 12 May 2023 12:30 AM IST (Updated: 12 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே கே.சி.பட்டியில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, அழகுமலை, பெரியூர் ஆகிய பகுதியில் உள்ள நிலங்களில் சில்வர் ஓக், வேங்கை, பலா உள்ளிட்ட பல்வேறு மரங்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை திட்டம் மற்றும் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கே.சி.பட்டி, அழகுமடை ஆகிய மலைப்பகுதிகளில் சில்வர் ஓக் வகை மரக்கன்றுகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் ஆறுமுகம் கூறுகையில், கே.சி.பட்டி, அழகுமடை பகுதிகளில் 1 லட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கன்னிவாடி பகுதியில் தேக்கு, மகாகனி, மலைவேம்பு, குமிழ் ஆகியவற்றில் 1 லட்சம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என்றார்.


Next Story