விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வினியோகம்
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெள்ளூர், ஆதிச்சநல்லூர், ஸ்ரீமூலக்கரை, பேரூர், அகரம், சூளைவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூர், உமரிக்காடு, மஞ்சள்நீர்காயல் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் உற்பத்தியை பெருக்கும் வகையில் புங்கார் ரக பாரம்பரிய நெல்விதைகள் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை துணை இயக்குனர் பழனிவேலாயுதம் ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் ஸ்ரீவைகுண்டம் வட்டார வருவாய் கிராமங்களில் தாமிரபரணி ஆற்றுபாசன பகுதியில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நெல் செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு ஒரு எக்ேடருக்கு 40 கிலோ மானிய விலையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் வனஜாதேவி, வேளாண்மை அலுவலர் இமயா, துணை வேளாண்மை அலுவலர் சிவகுமார், உதவி வேளாண்மை அலுவலா்கள் மகேஷ் மூர்த்தி, காயத்ரி மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.