2 ஆயிரம் பேருக்கு காய்கறிகள் வினியோகம்
மயிலார் பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான ஜெ.சிந்துஜா ஜெகன் மயிலார் பண்டிகையொட்டி 2 ஆயிரம் பேருக்கு தக்காளி, முள்ளங்கி, வாழைக்காய், கோஸ், பீன்ஸ், பூசணி, கொத்தமல்லி ஆகிய 7 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை 2 ஆயிரம் பேருக்கு காளியம்மன் கோவில் பகுதியில் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story