திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு


திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு
x

திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு

திருப்பூர்

தாராபுரம்

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாய தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு தாராபுரம் ஜோதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கிய பேரணி பெரியகடைவீதி, பொள்ளாச்சி சாலை, அமராவதி ரவுண்டானா வழியாக மாநாட்டு மண்டபத்தை அடைந்தது. அங்கு சங்கத்தின் மூத்த முன்னோடி எஸ்.மல்லப்பன் கொடியேற்றி வைத்தார். பின்னர் மாவட்ட துணை செயலாளர் ஏ.சண்முகம் தலைமை மாநாடு நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சுந்தரம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாடு வரவேற்புகுழு செயலாளர் என்.கனகராஜ் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயலாளர் அ.பழனிச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் அ.பஞ்சலிங்கம் செயலாளர் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் பொருளாளர் அறிக்கையையும் முன்வைத்தனர். அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் புதிய மாவட்டக்குழு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக ஏ.சண்முகம், செயலாளராக அ.பஞ்சலிங்கம், பொருளாளராக ஆர்.மணியன், துணை தலைவராக ஜி.சுந்தரம், துணை செயலாளராக இ.சண்முகம் மற்றும் 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சிஐடியூ மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.துரைசாமி மாநாட்டு நிறைவுரையாற்றினார்.

பின்னர் விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகர்ப்புற வேலைத்திட்டத்தை அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திடவேண்டும். தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினசரி சம்பளத்தை ரூ600 ஆகவும் உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு நிலமில்லாத ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்யவும், வீட்டுமனைகளுக்கும் பிரித்து வழங்கவேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும். மூலனூர் ஒன்றியம் சேசையம்பாளையம், கிளாங்குண்டல் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாடு அமைத்து தரவேண்டும். நூறாண்டு பழமை வாய்ந்த தாராபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டும் அமுலாகவில்லை. எனவே தாராபுரம் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், டயாலிஸ் சிகிச்சை, நவீனப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும். 108 சேவை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வரவேற்புக்குழு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார். முன்னதாக தாராபுரம் ஓட்டல் தொழிலாளர்கள் சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.




Next Story