தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகளை பெறலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகளை பெறலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகளை பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பாரம்பரிய நெல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை மூலம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆத்தூர் கிச்சடி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 2 ஆயிரத்து 970 கிலோ விநியோகம் செய்யப்பட உள்ளது. ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்; சாத்தான்குளம், தூத்துக்குடி வட்டாரங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 10 கிலோ விதை வழங்கப்படும்.
முன்னுரிமை
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, பட்டா, சிட்டா, நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.