மாவட்ட தடகள போட்டிகள்
கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தொடங்கியது.
தடகள போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்ட தடகள சங்கத்தலைவரும், பர்கூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 14, 17 மற்றும் 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில், குடியரசு மற்றும் பாரதியார் தின போட்டிகளாக, 100, 200, 400, 500, 800 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் மற்றம் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
1,800 பேர் பங்கேற்பு
இந்த போட்டிக்கு 9 சரகங்களில் இருந்து 1,800 மாணவ, மாணவிகளும், 200-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் செய்துள்ளனர்.
இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.