கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, துணை சபாநாயகர் ஆய்வு
கீழ்பென்னாத்தூரில் கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, துணை சபாநாயகர் ஆய்வு செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக மாவட்ட முதன்மை உரிமையியல் கோர்ட்டு மற்றும் நடுவர் கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கோர்ட்டு அமையவிருக்கும் இடத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தும் வகையில் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா ஆலோசனை கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட அரசு வக்கீல்கள் மனோகரன், புகழேந்தி, மாவட்ட கவுன்சிலர்ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, தாசில்தார் சக்கரை, நகர தி.மு.க. செயலாளர் அன்பு, அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.