சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு
விருதுநகரில் சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையின் 3-வது மாவட்ட மாநாடு நேற்று அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டினை மாநில துணைத்தலைவர்அன்பழகன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜானகி அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் அய்யனார் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கிட வேண்டும். போனஸ் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி வரவேற்றார். முடிவில் வெள்ளைத்தாய் நன்றி கூறினார்.