மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி ஆலோசனை கூட்டம்


மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2022 11:52 PM IST (Updated: 3 Jun 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் அசோகன், துணை செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், பொருளாளர் கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வரவேற்றார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளில், இளைஞரணி, மாணவரணி சார்பில் திராவிட மாடல் கருத்தரங்கு நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அரசு வக்கீல் ஜெயக்குமார் உள்ளிட்ட மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிர்மல் ராகவன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story