மாவட்ட கல்வி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது-முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


மாவட்ட கல்வி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது-முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
x

மாவட்ட கல்வி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் கடைவீதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றும் முடிவினை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story