மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்:கலெக்டர் தலைமையில் நடந்தது
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "அரசு சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். ஆஸ்பத்திரி கட்டிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், ஆஸ்பத்திரிகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் மீனாட்சிசுந்தரம், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளா செல்வி, துணை இயக்குனர்கள் டாக்டர் போக்ஸோ ராஜா (சுகாதாரப்பணிகள்), டாக்டர் அன்புசெழியன் (குடும்ப நலம்), டாக்டர் ராஜபிரபாகர் (காசநோய்), டாக்டர் ரூபன்ராஜ் (தொழுநோய்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.