மாவட்ட அளவிலான போட்டி


மாவட்ட அளவிலான  போட்டி
x

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் சிவகாசியில் நேற்று காலை மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி நடைபெற்றது. 9 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் 16 பிரிவுகளில் நடத்தபட்டது. இதில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை தொழில் அதிபர் அஞ்சாதேவி சொர்ணமாணிக்கம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். போட்டியில் 489 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவிலான வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இறுதிபோட்டிகள் நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட இறகுபந்து கழக நிர்வாகிகள் பார்த்தீபன், பிரதீப், ரவிக்குமார், அருண்குமார், சீனிவாச ராகவன், செந்தியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story