மாவட்ட அளவிலான செஸ் போட்டி


மாவட்ட அளவிலான செஸ் போட்டி
x

ஒலிம்பியாட் விளையாட்டை காண மாவட்ட அளவிலான செஸ் போட்டி 11, 12-ந் தேதிகளில் நடக்கிறது.

புதுக்கோட்டை

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் வகையிலும், போட்டியை புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகள் காண்பதற்காக 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி வருகிற 11, 12-ந் தேதிகளில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட செஸ் சங்கத்தினரால் நடத்தப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள நுழைவுக்கட்டணம் எதுவும் கிடையாது.

அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பின் சந்தா செலுத்தி பதிவு எண் உள்ள அனைத்து வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். கடந்த 01-01-2017-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடைபெறும். போட்டியில் முதல் இடம் பிடிக்கும் ஆண் மற்றும் பெண்கள் ஒலிம்பியாட் போட்டியை காண தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் 25 இடங்களை பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் 25 பேருக்கு ஒலிம்பியாட் தமிழ்நாடு அரசு, ஏ.ஐ.சி.எப். சின்னங்கள் பொறிக்கப்பட்ட பரிசு கோப்பைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செஸ் சங்கத்தினரை அணுகலாம் என அச்சங்கத்தின் செயலாளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.


Next Story