மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
காரைக்குடி அருகே மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
காரைக்குடி,
நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி காரைக்குடி அருகே மானகிரி ஸ்ரீராஜ வித்ய விகாஸ் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியை பள்ளி முதல்வர் ஐயப்பன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் பிரகாஷ், சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சதுரங்க கழக தலைவர் நாகராஜன் வரவேற்றார்.
மொத்தம் 5 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 75 வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கிட்டன் கிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குனர் மற்றும் ஸ்ரீராஜ வித்ய விகாஸ் பள்ளியின் முதல்வர் ராமமூர்த்தி, சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் சார்லஸ் ஜான் கென்னடி, கூடுதல் செயலாளர் பிரகாஷ் மணிமாறன், இணை செயலாளர்கள் ராமு, பாலு, சதுரங்க கழக பொருளாளர் வசந்தகணேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.